குடும்பமே கோயில் — ஒரு கவிதை நாடகம்

Title of the book

குடும்பமே கோயில்

வாசகர்கள் கூறியவை (Readers’ Views)           Introduction in English

குடும்பமே கோயில் என்னும் எனது புத்தகத்தை மணிமேகலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஆயிரமாயிரம் வருடங்களாகத் தலைமுறை தலைமுறையாக நமக்கு நம் முன்னோர்கள் வழங்கியுள்ள குடும்ப அமைப்பைச் சிதைந்து விடாமல் கட்டிக் காத்து நம் சந்ததியினருக்கு வாரிசு சொத்தாக ஒப்படைப்பது நம் அனைவரின் இன்றியமையாத கடமை என்பதைக் கருப் பொருளாகக் கொண்டுள்ளது ‘குடும்பமே கோயில்’ எனும் இந்நூல்.

பெற்றோர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றி, சந்தேகித்து, தொடர்ந்து சண்டையிடுவதால் அவர்களின் மகளின் மனம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை மனோவியல் ரீதியாக ஒரு கவிதை நாடகமாக வழங்கும் நூல் இது.

மீனா ஆகிய கதாநாயகி தன் அம்மாவிடம்:

நீயும் என் அப்பாவும்
பல வருடங்களாக
நடத்திய அந்த கடும் போர்
முழுமையாக நடந்தேறியது
என் இதயமாகிய களத்தில்தான்.

என்கிறாள். மேலும் அவள் சொல்கிறாள்:

நான் ஒவ்வொரு கணமும்
நீங்கள் பிரிந்துவிடுவீர்களோ
என்று பயப்படுவேன்.

அத்துடன், அவள் மனவேதனையை இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்:

நீங்கள் இருவரும்
விலக விலக
என் இதயத்தின் தசைகள்
இரு திசைகளிலும்
இழுக்கப்பட்டன

மீனாவின் மனதை குழப்பத்திலிருந்து மீட்க அவளுக்கு உதவும் மன நல நிபுணர் நூலின் சில பகுதிகளில் மனோவியல் விஷயங்களை விளக்குகிறார்:

கனவுகள் நம் மனதின்
அடித்தளத்தில் ஒளிந்திருக்கும்
ஞாபகங்களின் படிமங்கள்
மனத்திரையின் திரைப்படங்கள்.

புத்தகத்தின் தொடக்கத்தில் மனோவியல் பற்றி 11 பக்கங்களில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில், நம் குழந்தை பருவ ஞாபகங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில், இப்புத்தகம் மிக முக்கியமான ஒரு உண்மையைச் சித்தரிக்க முயற்சிக்கிறது:

சிப்பிக்குள் வளரும் முத்துப் போல்
சிசுவின் மனம்
அவரை வளர்ப்பவர்களின்
பிரதிபலிப்பாகவே
உருவாகிறது.

நம் சமுதாயத்தில் நிகழந்து வரும் நம் சந்ததியினரை பாதிக்கக்கூடிய சில மாற்றங்களைச் சுட்டிக் காட்டும் இந்த நூலை அனைவரும் படித்து இவ்விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

இந்தப் புத்தகத்தை சென்னை தி. நகரிலுள்ள மணிமேகலை புத்தகக் கடையில் வாங்கலாம். அல்லது தொலை பேசி எண் 044-24342926 அல்லது 044-24346082 மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு தபாலில் அனுப்பச் சொல்லலாம். விலை: ரூ 45.

வாசகர்கள் கூறியவை (Readers’ Views)           Introduction in English


Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக